இந்தியா

அலட்சியத்தின் உச்சம்: பெங்களூருவில் 54 பயணிகளை ஏற்றிச் செல்லாமல் பறந்த விமானம்!

சமீப காலமாக விமான பயணங்கள் தொடர்பாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன.  அந்த வகையில்  "கோ பர்ஸ்ட்" ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை தந்துள்ளது. 

DIN


பெங்களூரு:  பெங்களூரு நகரின் தேவனஹள்ளி கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை விமான ஊழியரின் குழப்பத்தால்  54 பயணியரை ஏற்றிச் செல்லாமல் தில்லி செல்லும் "கோ பர்ஸ்ட்" விமானம் பறந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. விரக்தியடைந்த பயணிகள் "அலட்சியத்தின் உச்சம்" இது என்று ட்விட்டரில் விடியோக்களைப் பகிர்ந்துகொண்டு தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டியுள்ளனர்.

சமீப காலமாக விமான பயணங்கள் தொடர்பாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன.  அந்த வகையில்  "கோ பர்ஸ்ட்" ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை தந்துள்ளது. 

பெங்களூரு நகரின் தேவனஹள்ளி கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை தலைநகர் தில்லிக்கு ஜி 8116 எண் கொண்ட "கோ பர்ஸ்ட்" விமானம் லக்கேஜ்களுடன் புறப்பட்டதாகவும், 54 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுச் சென்றதாகவும், இது அலட்சியத்தின் உச்சம் என்று விரக்தியடைந்த பயணிகள் சமூக ஊடகங்களில் விடியோக்களைப் பகிர்ந்துகொண்டு தங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்து வருகின்றனர். 

இது தொடர்பாக  நீரஜ் பட்  என்ற பயணி  விமான நிறுவனத்தை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த பெங்களூரு-தில்லி கோ பர்ஸ்ட் விமானத்தில் ஏறுவதற்காக, முதலாவது ட்ரிப்பில் விமானத்திற்கு பேருந்தில் வந்த 50 பயணிகள் ஏறியுள்ளனர். 

இரண்டாவது ட்ரிப்பில் பேருந்தில் வந்த 54 பயணியர்கள் டார்மார்க் எனப்படும் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து பயணிகள் ஏறுவதற்குள்ளாகவே காத்திருந்தவர்களை அங்கேயே விட்டுவிட்டு லக்கேஜ்களுடன் விமான புறப்பட்டுச் சென்றதாகவும், பயணிகள் அனைவரும் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் செய்வதறியாது சிக்கித் தவிக்கிறார்கள், உங்கள் ஊழியர்கள் திறமையில்லாதவர்களாக உள்ளனர், இது இந்திய விமான வரலாற்றில் நடந்ததில்லை."

விமான பயணிகளின் லாக்கேஜ்களுடன் புறப்பட்டுச் சென்றதால் 54 பயணிகளையும் விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்றதால், அவர்கள் தீவிர பாதுகாப்புப் பிரிவில் பயணிகள் சிரமப்படுகின்றனர்" என்று நீரஜ் பட் செய்துள்ளார்.

பெங்களூரில் இருந்து கோ பர்ஸ்ட் விமானத்தில் ஏறத் தயாராக இருந்தோம், ஆனால் பேருந்தில் இருந்து விமானத்தில் ஏறுவதற்குள் விமானம் புறப்பட்டு சென்றதாக கூறியுள்ள ஸ்ரேயா சின்ஹா என்ற பயணி, ஏர்லைன்ஸை நிறுவனத்தை கடுமையாகச் சாடியுள்ளார். மேலும் இது "மிகவும் திகிலூட்டும் அனுபவம்" என்று கூறியுள்ளார். 

மேலும், பயணியரை கவனிக்காமலேயே விமான ஊழியர் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், இது அலட்சியத்தின் உச்சம் எனவும், தூக்கத்தில் இயங்குகிறதா? அடிப்படடையான சோதனைகள் கிடையாதா என பயணியர்கள் தங்கள் கோவத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கேட்டு உள்ளது. 

இந்நிலையில், பயணிகளை ஏற்றாமல் விமானம் சென்ற விவகாரம் தொடர்பாக 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. “வணக்கம் நீரஜ், சிரமத்திற்கு வருந்துகிறோம். உங்கள் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் உங்கள் பிஎன்ஆர் எண்ணை டிஎம் வழியாகப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம், இதனால் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்ள முடியும்” என்று கூறியுள்ளது. 

மேலும், அந்த விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தும் விமான நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

கிரவுண்ட் தரப்பு ஊழியர்களுடன் தகவல்தொடர்பு இல்லாததே இந்த மிகப் பெரிய தவறுக்கு வழிவகுத்தது என விமான ஊழியர்கள் கூறினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்... அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே!

கோவை, நீலகிரிக்கு 3 நாள்கள் கனமழை எச்சரிக்கை!

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

SCROLL FOR NEXT