இந்தியா

ஹரியாணாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

DIN

ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

ரோஹ்தக்-ஜிந்த் ரயில் பாதையில் சமர்கோபால்பூர் கிராமத்திற்கு அருகில்  சரக்கு ரயில் ரோஹ்தக்கில் இருந்து ஜிண்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சரக்கு ரயிலின் ஒட்டுநர் ரோஹ்தக்கில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து 8 பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது. 

மேலும் இச்சம்பம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT