இந்தியா

20 கோடி ரூபாய் மதிப்புடைய நாய்: நாள் ஒன்றுக்கு ரூ.2,000 செலவு

நாட்டிலேயே மிக அதிக விலை மதிப்புள்ள காகேசியன் ஷெப்பர்டு நாயைக் காண, பல்லாரி திருவிழாவில் ஏராளமானோர் திரண்டனர்.

DIN

பல்லாரி: நாட்டிலேயே மிக அதிக விலை மதிப்புள்ள காகேசியன் ஷெப்பர்டு நாயைக் காண, பல்லாரி திருவிழாவில் ஏராளமானோர் திரண்டனர்.

இரண்டு நாள் பல்லாரி உத்சவ், ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில், ரூ.20 கோடி மதிப்புள்ள காகேசியன் ஷெப்பர்டு நாய் பங்கேற்றது. பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்குச் சொந்தமான இந்த வகை நாயின் வயது 14 மாதங்கள்.

மிகவும் அரிதான இனத்தைச் சேர்ந்தது. இந்த வகை நாய்க்கு ரூ.20 கோடி விலை கொடுக்கவும் தயாராக இருந்தார் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர். 

இது குறித்து சதீஷ் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் நாட்டிலேயே மிக விலை மதிப்புடைய நாய் இது. இந்த நாயின் பராமரிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2,000 செலவாகிறது. பெங்களூருவிலிருந்து பல்லாரிக்கு மிகவும் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட குளிர்சாதனம் பொருத்தப்பட்ட காரில் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது என்னிடம் இரண்டு காகேசியன் ஷெப்பர்டு வகை குட்டிகள் உள்ளன. அவற்றை தலா 5 கோடிக்கு வாங்க பலரும் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த உத்சவத்தில் தனது நாயுடன் பங்கேற்க வருமாறு சதீஷுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

SCROLL FOR NEXT