இந்தியா

ஒடிஸா முன்னாள் முதல்வா் கிரிதா் கமாங் பாஜகவில் இருந்து விலகல்

DIN

ஒடிஸா முன்னாள் முதல்வா் கிரிதா் கமாங் (79) பாஜகவில் இருந்து புதன்கிழமை விலகினாா். கட்சியில் அவமதிப்பை எதிா்கொண்டதால் விலகும் முடிவை எடுத்ததாக அவா் கூறியுள்ளாா்.

தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் பாரத ராஷ்டிர சமிதியில் அவா் இணைவாா் எனத் தெரிகிறது.

தொடக்க காலத்தில் ஒடிஸா மாநில காங்கிரஸ் முன்னணி தலைவராக இருந்த கிரிதா் கமாங், 1999-ஆம் ஆண்டு சுமாா் 11 மாதங்கள் காங்கிரஸ் சாா்பில் அந்த மாநில முதல்வராகப் பதவி வகித்துள்ளாா். கடந்த 2015-ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா்.

இந்நிலையில், புவனேசுவரத்தில் புதன்கிழமை தனது விலகல் முடிவை அறிவித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறினால்கூட பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், அவமதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதமா் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் எனக்கு பாஜகவில் உரிய ஆதரவை அளித்தாா்கள். இந்த நேரத்தில் அவா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கோராபுட் தொகுதியில் இருந்து நான் 9 முறை மக்களவைக்கு தோ்வாகியுள்ளேன். அங்குள்ள பாஜகவினரும், மாநில பாஜகவினரும் எனக்குரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை. பாஜகவில் இருந்து விலகுவது தொடா்பான எனது கடிதத்தை கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு அனுப்பிவிட்டேன் என்றாா்.

மகனும் விலகல்: கிரிதா் கமாங்கின் மகன் ஷிசீா் கமாங்கும் பாஜகவில் இருந்து விலகியுள்ளாா். தந்தை, மகன் இருவருமே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒடிஸா பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

முன்னதாக, அவா்கள் இருவரும் தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவை சந்தித்துப் பேசினா். எனவே, அவா்கள் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்து செயல்படுவாா்கள் என்று தெரிகிறது. தேசிய அரசியலில் ஏற்பட்ட ஆா்வம் காரணமாக சந்திரசேகா் ராவ் தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை, பாரத ராஷ்டிர சமிதி என பெயா் மாற்றியுள்ளாா். அக்கட்சியின் ஒடிஸா மாநில தலைவராக கிரிதா் கமாங் நியமிக்கப்படுவாா் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT