இந்தியா

ராகுலின் நடைப்பயணத்தில் இணைந்த மெகபூபா முஃப்தி!

ANI

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்தில் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி இணைந்துள்ளார். 

பாதுகாப்பு மீறல் காரணமாக வெள்ளிக்கிழமை நடைப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அவந்திபோராவிலிருந்து மீண்டும் நடைப்பயணம் தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராகுல் கூறுகையில், 

நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அணிவகுப்பில் சேர விரும்பினர். சுரங்கப்பாதையின் மறுபக்கத்தில் இருந்து மக்கள் வந்ததாகவும், இதனால் பாதுகாப்பில் தடை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த பயணத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. நடைப்பயணத்தின் நோக்கம் முழு நாட்டினராலும் பாராட்டப்பட்டது. 12-13 மாநிலங்களில் மேற்கொண்ட இந்த பயணத்தில் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். 

நடைப்பயணத்தின் பாதுகாப்பு குறித்து பேசிய அவர், இன்று படைகள் அதிகளவில் உள்ளன. எனது ஒரே வேண்டுகோள் பயணத்தில் சேர விரும்பும் மக்களுக்குப் பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும். இது பாதுகாப்புப் படையினரின் யாத்திரையாக இருக்கக்கூடாது என்றார். 

ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT