ஆக்ராவில் கார் மீது ஆட்டோ மோதல்: 6 பேர் பலி
ஆக்ராவில் வேகமாக வந்த கார் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆக்ராவில் வேகமாக வந்த கார் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோரகர் காவல் நிலையம் அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் கார் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை ஆணையர் சோனம் குமார் தெரிவித்தார்.
படிக்க: எதிர்நீச்சல் தொடரிலிருந்து விலகிய முக்கிய பிரபலம்!
Advertisement
Advertisement
ஆட்டோ ஓட்டுநர் உள்பட 6 பேர் பலியாகினர். காரை ஓட்டிவந்த நபர் தலைமறைவானார். அவரது நண்பர்களான பிங்கு மற்றும் பனியா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோரகர் காவல் நிலைய பொறுப்பாளர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
கார் ஓட்டுநர் பண்டி நண்பர்களுடன் குடித்துவிட்டு, பின்னர் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து நடந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.