இந்தியா

நாகாலாந்தில் கார்களை நொறுக்கிய பாறை.. பதற வைக்கும் விடியோ

கோஹிமா-திமாபுர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார்களை, நிலச்சரிவு ஏற்பட்டதில் உருண்டு வந்த பாறை சுக்குநூறாக்கிய விடியோ வெளியாகியிருக்கிறது.

DIN


கோஹிமா-திமாபுர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார்களை, நிலச்சரிவு ஏற்பட்டதில் உருண்டு வந்த பாறை சுக்குநூறாக்கிய விடியோ வெளியாகியிருக்கிறது.

நாகாலாந்து மாநிலம் சுமௌகேடிமா மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நேரிட்டுள்ளது. அதன் விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐயில் பகிரப்பட்டிருக்கும் அந்த விடியோவில், தேசிய நெடுஞ்சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன் பின் பின்றாக சிகப்பு விளக்குகளை எரியவிட்டபடி காத்திருக்கின்றன. சாலையில் நேரிட்ட நிலச்சரிவு காரணமாக போவதற்கு வழியில்லாமல் வாகனங்கள் நின்று கொண்டிருந்த போது, கண் இமைக்கும் நேரத்தில், மலையிலிருந்து உருண்டு வந்த பெரும்பாறை ஒன்று, கார்கள் மீது மோதியதில், கார்கள் சுக்குநூறாகின.

இந்த சம்பவம் அனைத்தும், அந்த காரின் பின்னால் நின்றிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் இரண்டு பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். ஒருவர் காருக்குள்ளேயே இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாகவும், அவரை மீட்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT