இந்தியா

ரயிலை தள்ளிய விவகாரம்: ரயில்வே விளக்கம்!

ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் ரயிலை தள்ளும் காணொலி இன்று இணையத்தில் பரவிய நிலையில், தெற்கு மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

DIN

ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் ரயிலை தள்ளும் காணொலி இன்று இணையத்தில் பரவிய நிலையில், தெற்கு மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

ராணுவ வீரர்கள், ரயில் ஊழியர்கள் மற்றும் மக்கள் இணைந்து ரயில் பெட்டிகளை தள்ளுவது போன்ற காணொலி இன்று காலை ட்விட்டரில் திடீரென்று டிரெண்டானது.

ரயிலின் விவரம், எந்த இடத்தில் நடந்த சம்பவம் போன்ற எவ்வித தகவலும் தெரியாத நிலையில், பழுதாகி நின்ற ரயிலை மக்கள் தள்ளுவதாக பலர் நினைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், இந்த காணொலிக்கான விளக்கத்தை தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

“கடந்த 7-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்துக்கு சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா விரைவு ரயில் பொம்மைப்பள்ளி-பகிடிபள்ளி பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதில், எஸ் 2 முதல் எஸ் 6 வரையிலான பெட்டிகளுக்கு தீ பரவிய நிலையில், எஸ் 1, எஸ் 2 மற்றும் பொதுப்பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்காக அந்த பெட்டிகள் கழற்றிவிடப்பட்டன.

அந்தப் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காக எஞ்ஜின் வருவதற்கு காத்திருக்கும் நேரத்தில் தீ பரவ வாய்ப்பிருந்ததால், அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், ரயில்வே போலீசாருடன் இணைந்து மக்கள் ஒன்றுகூடி ரயிலை தள்ளினர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT