இந்தியா

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! தில்லி மக்களுக்கு எச்சரிக்கை!!

ஹரியாணாவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தில்லியிலுள்ள யமுனை ஆறு முழுவதுமாக நிரம்பி அபாய கட்டத்தை எட்டியுள்ளது. 

DIN


ஹரியாணாவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தில்லியிலுள்ள யமுனை ஆறு முழுவதுமாக நிரம்பி அபாய கட்டத்தை எட்டியுள்ளது. 

தில்லியில் தொடர் மழை பெய்து வருவதால் யமுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி யமுனா நதியில் அபாயகட்டமான 205.33 மீட்டர் உயரத்தை எட்டியதாக அம்மாநில பேரிடர் மீட்புத் துறை அறிவித்துள்ளது. 

தில்லி பழைய ரயில்வே பாலத்தில் 205.4 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஹரியாணாவிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், யமுனை ஆற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஹரியாணாவிலிருந்து 2.15 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. 

இது தொடர்பாக பேசிய தில்லி அமைச்சர் செளரப் பரத்வாஜ், தில்லி அரசு தயாராகவுள்ளது. மழை வெள்ள பாதிப்பு எச்சரிக்கையிலிருந்து காக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT