இந்தியா

வேகமாகக் குறைந்த திரெட்ஸின் பயன்பாடு: ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க்!

DIN

திரெட்ஸ் செயலி, பாதிக்கும் மேற்பட்ட பயனர்களை இழந்துவிட்டதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார். 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்குப் போட்டியாக 'திரெட்ஸ்' என்ற செயலியை கடந்த ஜூலை 6ல் அறிமுகப்படுத்தியது. அறிமுகமான 5 நாள்களில் அதில் 10 கோடி பேர் இணைந்தனர்.

பிற சமூக வலைத்தளங்களை ஒப்பிடுகையில், தொடங்கிய சில நாள்களில் அதிக பயனர்களைப் பெற்ற செயலி திரெட்ஸ் என்று கூறலாம். 

ஆனால், அதன் பயன்பாட்டை பொருத்தவரையில் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். 

திரெட்ஸில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மார்க், '10 கோடிக்கும் அதிகமான மக்கள் கணக்கு தொடங்கி, அவர்களில் முழுமையாக அல்லது பாதி பேராவது செயலியை தொடர்ந்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால், நாங்கள் இன்னும் அந்த நிலைமைக்குச் செல்லவில்லை. 

எனினும் தொடக்கத்தில் திரெட்ஸ் பயன்பாடு குறைந்தது இயல்பானதுதான். திரெட்ஸ் செயலில் மேலும் பல புதிய அம்சங்கள் சேர்த்தால் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

திரெட்ஸ் செயலியில் பயனர்களை தக்கவைக்க முயற்சிப்போம். இன்ஸ்டாகிராமில் உள்ளவர்கள் முக்கியமான திரெட்ஸ் பதிவுகளை பார்க்க உறுதி செய்வோம்' என்றார். 

இன்ஸ்டாகிராமும், திரெட்ஸ் செயலியும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. திரெட்ஸ் செயலியில் உள்நுழைய இன்ஸ்டாகிராம் கணக்கு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகள் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதா? உச்சநீதிமன்றம் கேள்வி

வசீகரம்!

காஸா போர்: ஐ.நா.வில் சேவையாற்றிய ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி பலி

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT