கோப்புப்படம் 
இந்தியா

பிகாரில் பயிற்சி ஆசிரியர் சுட்டுக் கொலை!

பிகாரின் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தின் ஆசிரியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பாட்னா: பிகாரின் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தின் ஆசிரியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதன்கிழமை இரவு பார்பிகாவில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பார்பிகா-மெஹஸ் சாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் ஆசிரியரை தடுத்து நிறுத்தியுள்ளனர். 

அதில், ஒருவர் ஆசிரியரின் தலைக்கவசத்தை அகற்றியும், மற்றொருவர் அவரை துப்பாக்கியாலும் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த ஆசிரியர் குமாரை மீண்டும் நான்கு முறை மர்ம நபர் சுட்டுள்ளார். 

பலியான பயிற்சி ஆசிரியர் குமார் நிலேஷ் மெஹஸ் காவல் நிலையத்தின் கீழ் தர்ம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT