இந்தியா

குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதே ஆம் ஆத்மியின் அரசியல்: கேஜரிவால்

DIN

தில்லியில் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதே ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

தில்லியில் உத்தம் நகரில் புதிய பள்ளி கட்டடத்தை அரவிந்த் கேஜரிவால் திறந்துவைத்தார். 

அப்போது அவர் பேசுகையில், 

பாஜக, காங்கிரஸ் அரசுகள் ஆட்சிக்கு வந்துள்ளன தவிர அவர்களின் நிகழ்ச்சி நிரலில் கல்வி குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கமாகும். அதுவே எங்கள் அரசியல். 

பள்ளிகளின் நிலையை மேம்படுத்துவதற்காக ஆம் ஆத்மி ஆட்சிக்கு வருவதற்கு கடவுள் காத்திருந்தார் என்று அவர் கூறினார். 

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருப்பதால், குடிமை அமைப்பின் 1,800 பள்ளிகளின் நிலையை மேம்படுத்த விரும்புகிறது. மாணவர்கள் நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பள்ளிகளையும் மேம்படுத்துவோம் என்று அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT