கோப்புப் படம் 
இந்தியா

மனைவி, 3 மகள்களைக் கொன்று தந்தை தூக்கிட்டுத் தற்கொலை: பிகாரில் அதிர்ச்சி!

பிகாரின் ககாரியா மாவட்டத்தில் மனைவி, 3 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பிகாரின் ககாரியா மாவட்டத்தில் மனைவி, 3 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தற்கொலை சம்பவம் புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் எகானியா கிராமத்தில் நடைபெற்றது. முன்னா யாதவ் தனது மனைவி பூஜா தேவி மற்றும் மூன்று மகள்களான சுமன்(18), ஆஞ்சல்(16) ரோஷ்னி குமாரி(15) ஆகியோரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். 

பின்னர், தனது இரண்டு மகன்களையும் கொல்ல முயன்றார். ஆனால் அவர்கள் தந்தையிடம் இருந்து தப்பித்துவிட்டனர். பின்னர் யாதவ் வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தந்தையிடமிருந்து தப்பித்த இரண்டு மகன்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். 

இதுகுறித்து ககாரியாவின் காவல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

யாதவின் மகன்கள் இருவரும் தற்கொலை சம்பவத்தை விரிவாக விவரித்தனர். இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. 

பிரேதப் பரிசோதனைக்கு உடல்கள் அனுப்பபட்டுள்ளன. சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்பொழியில் கட்டடப் பணியில் மண் சரிந்து 3 போ் காயம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும்: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்

கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை: 2 போ் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது

SCROLL FOR NEXT