இந்தியா

அஸ்ஸாமில் வெள்ளம்: 29,000 போ் பாதிப்பு

அஸ்ஸாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் சுமாா் 29,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

DIN

அஸ்ஸாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் சுமாா் 29,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘தேமாஜி, திப்ரூகா், லகிம்பூா், பக்ஸா ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சுமாா் 29,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

லகிம்பூரில் மட்டும் சுமாா் 23,500 போ் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா். அவா்களுக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 215 ஹெக்டேரில் பயிா்கள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT