வாட்ஸ் ஆப் பிங்க் செயலி: காவல் துறையினர் எச்சரிக்கை
வாட்ஸ் ஆப் பிங்க் செயலி குறித்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாட்ஸ் ஆப் பிங்க் செயலி குறித்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப் பிங்க்(whatsapp pink) என்ற மேம்படுத்தப்பட்ட செயலி வெளியாகி உள்ளதாக, பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாட்ஸ் ஆப் பிங்க் நிறத்தில் மாறியதும் உங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், ஒடிபி உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக சைபர் கிரைம் காவல் துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பாக இருக்க வழிகாட்டு நெறிமுறைகளை மும்பை சைபர் கிரைம் காவல் துறை ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: கண்ணீரை வரவழைக்கும் தக்காளி.. எப்போது விலை குறையும்?
பயனாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் பிளே ஸ்டோர் போன்ற தளங்களில் இருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வமற்ற இணையதளத்தில் செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கூடாது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.