airindia075646 
இந்தியா

ஏர் இந்தியாவில் அதிக பெண் விமானிகள்!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 1,825 விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண் விமானிகள் என ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் 1,825 விமானிகளில் 15 சதவிகிதம் பேர் பெண் விமானிகள் என ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியாவுடன் இணைந்து 90க்கும் மேற்பட்ட பெண் விமானிகள், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை  மார்ச் 1 முதல் இயக்கி வருகின்றனர்.

குறிப்பாக அனைத்து பெண்கள் கொண்ட காக்பிட் மற்றும் கேபின் ஊழியர்களால் இயக்கப்படும் 90க்கும் அதிகமான விமானங்களில் ஏர் இந்தியா, உள்நாட்டு மற்றும் சர்வதேச வழிதடங்களில் 40 விமானங்களை இயக்கி வருகிறது.

அதே நேரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வளைகுடா பாதையில் 10 சர்வதேச விமானங்களையும், ஏர் ஏசியா இந்தியாவுக்குள் 40க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது.

ஏர் இந்தியாவின் பணியாளர்களில் 40 சதவீதத்திற்கும் மேலாக பெண்கள் உள்ள நிலையில் அதன் 1,825 விமானிகளில் 275 பேர் பெண்களாக உள்ளனர். அதே வேளையில் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்ட விமான நிறுவனமாகவும் ஏர் இந்தியா திகழ்கிறது.

ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான காம்ப்பெல் வில்சன் கூறுகையில், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வணிக பெண் விமானிகளைக் கொண்ட நாடு இந்தியா என்றார்.

இன்று ஏர் இந்தியாவில் எங்களுடன் இருக்கும் பெண் ஊழியர்களைப் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பெண்கள் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும் என்ற சக்திவாய்ந்த செய்தியை இதன் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT