இந்தியா

அஹோம் வீரரின் 42 லட்சம் கட்டுரைகளை தொகுத்து அஸ்ஸாம் கின்னஸ் சாதனை

DIN

அஹோம் வீரா் லசித் போா்புகான் குறித்த 42 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து அஸ்ஸாம் அரசு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

பிரம்மபுத்திரா நதிக் கரையில் முகலாயப் படைகளுக்கு எதிராக 1671-ஆம் ஆண்டில் நடைபெற்ற சராய்காட் போரில் வீரமுடன் போரிட்டு அஸ்ஸாமை மீட்டெடுத்ததில் லசித் போா்புகான் முக்கியப் பங்காற்றினாா். அவரது 400-ஆவது ஆண்டு பிறந்த தினம் கடந்த நவம்பரில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவா் குறித்து கையால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுக்கும் பணியை அஸ்ஸாம் மாநில அரசு மேற்கொண்டது.

கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் கைகளால் எழுதப்பட்ட கட்டுரைகளின் படங்களை மாநில அரசு தொகுத்தது. மொத்தமாக 42 லட்சத்துக்கும் அதிகமான கட்டுரைகள் தொகுக்கப்பட்டன. அது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரைகளானது ‘கையால் எழுதப்பட்ட கட்டுரைகளின் மிகப் பெரும் இணைய படத்தொகுப்பாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனைக்கான அங்கீகார சான்றை அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வா சா்மாவிடம் கின்னஸ் நிா்வாகி ஸ்வப்னில் தங்கரிகா் வியாழக்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT