இந்தியா

தில்லி அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

IANS


தில்லி பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 17-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் படிகள் 66 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சட்டத் துறையின் அறிவிப்பின்படி, 

எம்.எல்.ஏ.க்கள் மாத ஊதியம் ரூ.54 ஆயிரத்திலிருந்து தற்போது ரூ.90 ஆயிரம் பெற உள்ளனர். 

மேலும் இந்த அறிவிப்பின்படி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், தலைமைக் கொறடா, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் சம்பளம் மற்றும் படிகளும் தற்போதுள்ள ரூ.72 ஆயிரத்திலிருந்து ரூ.1,70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும், அமைச்சர்களின் அடிப்படை சம்பளம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

தினசரி கொடுப்பனவு(அலோவன்ஸ்) ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500 ஆக அதிகரித்துள்ளது. 

முன்னதாக ஜூலை 2022ல் தில்லி சட்டமன்ற எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவு வைக்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்த சம்பள உயர்வை சட்டத்துறை இன்று வெளியிட்டுள்ளது. 

சட்டமன்ற உறுப்பினருக்கான சம்பள உயர்வு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT