இந்தியா

அதிகரிக்கும் வெய்யில்: தெலங்கானாவில் இன்றுமுதல் அரைநாள் மட்டுமே பள்ளி!

தெலங்கானா மாநிலத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்றுமுதல் அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

DIN

தெலங்கானா மாநிலத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்றுமுதல் அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வெய்யிலின் அளவு 36 முதல் 38 டிகிரியாக பதிவாகி வருகின்றது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

“மாநிலம் முழுவதும் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மழலை, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நிகழ் கல்வியாண்டின் மீதமுள்ள நாள்களில் காலை 8 மணிமுதல் பகல் 12.30 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும்.

பள்ளிகளில் உள்ள சத்துணவில் மதிய உணவை பகல் 12.30 மணிக்கு அளிக்க வேண்டும். மேலும், 10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் பகல் 1 முதல் மாலை 5 வரை செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT