இந்தியா

3-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியினரும் மாறிமாறி முழக்கமிட்டதால் மக்களவை மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.

DIN

எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியினரும் மாறிமாறி முழக்கமிட்டதால் இரு அவைகளும் மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தியின் பிரிட்டன் பேச்சு குறித்து ஆளுங்கட்சியினரும் மாறிமாறி முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால் கடந்த இரண்டு நாள்களாக இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியவுடன் மீண்டும் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

மேலும், நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை எதிர்க்கட்சியினர் பேரணி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT