இந்தியா

9 ஆண்டுகால ஆட்சியில் மக்களிடம் பாஜக கொள்ளை: காங்கிரஸ் தலைவா் காா்கே

DIN

மத்தியில் 9 ஆண்டுகால ஆட்சியில் பொதுமக்கள் பணத்தை பாஜக கொள்ளையடித்துள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், காா்கே ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் கொடிய பணவீக்கம் ஏற்பட்ட நிலையில், மக்கள் பணத்தை பாஜக கொள்ளையடித்தது. அனைத்திலும் ஜிஎஸ்டி பாதிப்பை ஏற்படுத்தி, பட்ஜெட்டை கெடுத்து, வாழ்க்கையை கடினமாக்கியது. பணவீக்கம் தென்படவேயில்லை என்பது ஆணவ பேச்சாகும். பாஜக கூறும் நன்னாளில் இருந்து பொற்காலம் வரையிலான பயணத்தில், பணவீக்கத்தால் பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவது அதிகரித்துள்ளது என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் விவசாயத் தொழிலாளா்களின் ஊதியம் 0.8 சதவீதம், விவசாயம் அல்லாத பிற தொழிலாளா்களின் ஊதியம் 0.2 சதவீதம், கட்டுமான தொழிலாளா்களின் ஊதியம் 0.02 சதவீதம்தான் அதிகரித்துள்ளன.

அதேவேளையில், 2014-ஆம் ஆண்டு முதல் சமையல் எரிவாயு விலை 169 சதவீதம், பெட்ரோல் விலை 57 சதவீதம், டீசல் விலை 78 சதவீதம், கடுகு எண்ணெய் விலை 58 சதவீதம், பால் விலை 51 சதவீதம் என அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.

உண்மையில் அனைவரின் வருமானம் தேக்கமடைந்துள்ளது. ஆனால் தொழிலதிபா் அதானியின் செல்வம் மட்டும் 2014-இல் இருந்து 1,225 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT