இந்தியா

பாலியல் கல்வி குறித்த நிதீஷ் குமாரின் பேச்சு தவறாக மாற்றப்பட்டுவிட்டது: தேஜஸ்வி யாதவ்

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பேச்சு எதிர்க்கட்சியினரால் தவறாக மாற்றப்பட்டுவிட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

DIN

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பேச்சு தவறாக மாற்றப்பட்டு விட்டதாக பிகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பேச்சுக்கு எதிர்க் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறியுள்ளார். 

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: “ஒரு விஷயத்தை வேறு அர்த்தத்தில் புரிந்துகொள்வது தவறு. முதல்வர் நிதீஷ் குமாரின் கருத்து பாலியல் கல்வி தொடர்பானது. பாலியல் கல்வி குறித்து விவாதிப்பதற்கே மக்கள் தயங்குகிறார்கள். பள்ளிகளில் இதுதொடர்பான விஷயங்கள் தற்போது கற்பிக்கப்படுகிறது. அறிவியல் மற்றும் உயிரியல் கற்பிக்கப்படுகிறது. 

மக்கள்தொகை அதிகரிப்பைத் தடுப்பதற்கு நடைமுறையில் என்ன செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறினார். இதை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது. பாலியல் கல்வி தொடர்பானதாக கருதவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நவம்பர் 7-ஆம் தேதி ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார், “பிகார் மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் முன்பு 4.3 சதவீதமாக இருந்தது, இப்போது 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று கடந்த ஆண்டு அறிக்கையைக் குறிப்பிட்டு பேசினார். மேலும், கருவுறாமல் இருப்பதற்கு படித்த பெண்களுக்கு தெரியும்” என்று அவர் பேசியது சர்ச்சையானது. 

அதைத் தொடர்ந்து பாஜகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முதல்வர் நிதீஷ் குமாரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

SCROLL FOR NEXT