இந்தியா

சங்கரய்யா வலுவான பேச்சாளர்: மார்க்சிஸ்ட் கட்சி இரங்கல்

DIN

புது தில்லி: மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போதே விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவர். அதன் காரணமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் கல்லூரி இறுதி தேர்வெழுத இயலவில்லை. எட்டு வருடங்கள் இந்தியா விடுதலையடையும் வரை சிறையில் கழித்தவர்.

மார்க்சிஸ்ட் கட்சி அமைப்பதற்காக, ஒருங்கிணைந்த பொதுவுடைமை இயக்கத்தின் தேசிய குழுவில் இருந்து வெளியேறிய 32 பொதுக்குழு உறுப்பினர்களுள் சங்கரய்யாவும் ஒருவர்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர பெரும்பங்காற்றியவர், சங்கரய்யா. விவசாயி இயக்கத்தை வளர்த்தெடுப்பதிலும் முக்கிய பங்காற்றியவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளராகவும் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

சங்கரய்யா, வலுவான பேச்சாளர். பொதுவுடைமை அரசியலையும் கொள்கைகளையும் மக்களுக்கு புரியும்வகையில் விளக்கக் கூடியவர். கட்சியின் மீது அதீத பற்று கொண்டிருந்த மனிதர், பொது வாழ்வில் நேர்மையாகவும் எளிமையாகவும் இருப்பதில் உயர்ந்த அளவுகோலை உருவாக்கியவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

தொழிலாளி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

கூழாங்கற்கள் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்

ஆனைமடுவு அணை பகுதியில் கொட்டித் தீா்த்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT