இந்தியா

கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ்

DIN

மசோதா விவகாரத்தில் காலம்தாழ்த்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், மாநில ஆளுநா் காலம்தாழ்த்தி வருவதாக கேரள மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. 

மனுவில், கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட 8 மசோதாக்களுக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் உள்ளாா். இவற்றில் சில மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. 

இது மாநில மக்களின் உரிமையை மீறுவதாக உள்ளது என கேரள அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க கேரள ஆளுநரின் கூடுதல் செயலர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமனம்!

SCROLL FOR NEXT