கோப்புப்படம் 
இந்தியா

சோனியா காந்தியுடன் அசோக் கெலாட் சந்திப்பு! ராஜஸ்தான் தேர்தல் குறித்து ஆலோசனை?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்  சந்தித்துப் பேசி வருகிறார். 

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்  சந்தித்துப் பேசி வருகிறார். 

ராஜஸ்தான், மிஸோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் நவம்பா் 7-ஆம் தேதி முதல் தொடங்கி வெவ்வேறு நாள்களில் நடைபெற இருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறும் எனத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதன்படி, ராஜஸ்தானின் 200 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வரும் நவம்பா் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

மேலும் நேற்று தில்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

இதையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் , காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசி வருகிறார். 

சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. 

நேற்று தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே பாஜக, 5 மாநிலத் தேர்தல்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

எனவே, தேர்தல் பணிகள், வேட்பாளர்கள் குறித்து இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

SCROLL FOR NEXT