கோப்புப் படம் 
இந்தியா

ஜேஎன்யு பல்கலை. வளாகத்திற்குள் இருசக்கர வாகனம் மோதியதில் மாணவர் பலி: 3 பேர் காயம்

ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருசக்கர வாகனம் மோதியதில் மாணவர் ஒருவர் பலியானார்.  

DIN

ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருசக்கர வாகனம் மோதியதில் மாணவர் ஒருவர் பலியானார். 

தலைநகர் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று அதிகாலை நடந்து சென்ற இரண்டு பாதசாரிகள் மீது இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் மாணவர் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். 

உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் விஷால் குமாரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். 

மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான மாணவர் அன்ஷு குமார் பிகாரின் கயாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் பல்கலைக்கழகத்தில் ரஷிய மொழியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருவதாக அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT