பினராயி விஜயன் (கோப்புப் படம்) 
இந்தியா

நிஃபா காய்ச்சல்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!

கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

DIN

கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரளத்தில் நிஃபா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் ​​நிஃபா வைரஸ் என சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மேலும், கோழிக்கோட்டில் தாய் மற்றும் 3 குழந்தைகளுக்கு நிஃபா வைரஸ் காய்ச்சல் பாதித்திருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த நிஃபா வைரஸ் தொற்று காரணமாக, இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது

கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக பேசிய பினராயி விஜயன், மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கவனமாக இருப்பது நிலைமையைச் சமாளிக்கத் தேவையான வழியாகும். சுகாதாரத்துறை தயாரித்துள்ள செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT