இந்தியா

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குஜராத் முதல்வராக 4 முறையும் இந்தியப் பிரதமராக 2 முறையும் வெற்றிபெற்ற நரேந்திர மோடி, இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

மல்லிகார்ஜுன கார்கே 

பிறந்தநாள் தினத்தன்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர் உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல்காந்தி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். 

மு.க. ஸ்டாலின்

நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆரோக்கியத்துடன் ஆயுள் பெற வாழ்த்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். 
 

தமிழிசை செளந்தரராஜன்

விண்ணுலகில் சந்திராயன், ஆதித்யா போன்ற விண்கலத்தில் வெற்றி கண்டு மண்ணுலகில் பாரத தேசத்தை டிஜிட்டல் மயமாக்கி சுய சார்பு பாரத தேசத்தை உருவாக்கி உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய தலைவர், வலிமையான, வளமான பாரதத்தை உருவாக்கிய தலைவர், அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

புதுவை முதல்வர் ரங்கசாமி

இந்தியாவின் மரியாதை உங்கள் தலைமையின்கிழ் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் மரியாதை தொடர்ந்து உச்சம் பெற நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT