சந்திரபாபு நாயுடு (கோப்புப் படம்) 
இந்தியா

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்.5 வரை நீட்டிப்பு!

ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.300 கோடியை தவறாக கையாண்டு ஊழல் செய்ததாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து அவரை அண்மையில் கைது செய்தது.

இதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு நாள்கள் விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் (செப். 24) முடிவடைகிறது.     

ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் வைத்து சந்திரபாபு நாயுடுவிடம் 12 பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள் (குற்ற புலனாய்வுத் துறை) குழு விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT