இந்தியா

கர்ப்பிணிப் பெண் தீ வைத்து எரிப்பு: தாய், சகோதரன் கைது!

இளம் பெண் கர்ப்பமாக இருந்ததைக் கண்டித்து அவரது தாய் மற்றும் சகோதரரால் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. 

DIN

இளம் பெண் கர்ப்பமாக இருந்ததைக் கண்டித்து அவரது தாய் மற்றும் சகோதரரால் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. 

உ.பி.யின் ஹபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு நவாடா குர்த் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருமணமாகாத அந்த பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததால் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

வியாழன் இரவு பெண்ணின் தாயும் சகோதரனும் அவளை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். 

இதில், உடலில் 70 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ள அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் தாய் மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஹாபூர்) ராஜ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT