பிகார்: கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி பலி
பிகாரில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிகாரில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிகார் மாநிலம், சாப்ரா மாவட்டத்தில் உள்ள கால்வாயில் கார் ஒன்று நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மஸ்ராக் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயில் இருந்து சடலங்களை மீட்டனர்.
பின்னர் அருகே உள்ள சதர் மருத்துவமனைக்கு சடலங்கள் அனைத்தையும் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு காரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.