கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகர்தலா செல்லவிருந்த இண்டிகோ விமானம் மீது வெள்ளிக்கிழமை மின்னல் தாக்குதலுக்குள்ளானதாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
இடியுடன் கூடிய மழை பெய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதுதொடர்பான வானிலை எச்சரிக்கைகளை விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் ஏற்கெனவே விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இருப்பினும், இச்சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு பின்னர் மற்றொரு விமானத்தில் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இண்டிகோ நிறுவன தகவலின்படி, தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் இருவர் லேசாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
கொல்கத்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை காலை முதலே இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசியதால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
An IndiGo aircraft bound for Agartala was struck by lightning while on stand at the Kolkata airport on Friday during a thunderstorm, an Airports Authority of India (AAI) official said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.