ஜெய்ப்பூரில் கட்சித் தலைவர்களுடன் நட்டா சந்திப்பு!
ஜெய்ப்பூரில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையகத்தில் கட்சித் தலைவர்களுடன் இன்று சந்திப்பை நிகழ்த்தினார்.
ஜெய்ப்பூரில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையகத்தில் கட்சித் தலைவர்களுடன் இன்று சந்திப்பை நிகழ்த்தினார்.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் நட்டாவை பாஜக மாநிலத் தலைவர் சிபி ஜோஷி மற்றும் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து மோதி துங்கரி கணேஷ் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். பின்னர் கட்சி அலுவலகத்துக்கு வந்த அவர், கட்சித் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
மத்திய அமைச்சரும், ராஜஸ்தான் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகலாத் ஜோதி, மற்றும் தேசிய துணைத் தலைவரும், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் கட்சியின் பிற தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுவதையடுத்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.