முகப்பு
இந்தியா

ஜாதிவாரி கணக்கெடுப்பு புரட்சிகர நடவடிக்கை: ராகுல் காந்தி

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது புரட்சிகர நடவடிக்கை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

Updated On : 11 நவம்பர் 2023, 3:00 am IST
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
பகிர்:

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது புரட்சிகர நடவடிக்கை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ராகுல் காந்தியும் தொடா்ந்து இதற்கு ஆதரவாகப் பேசி வருகிறாா்.

இந்நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தின் சத்னா பகுதியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் எத்தனை போ் உள்ளனா் என்பது துல்லியமாக அறிவிக்கப்படும். இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நலத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

இது ஒரு புரட்சிகரமான, மக்களின் வாழ்க்கையை மாற்றும் நடவடிக்கை. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் அனைத்து மாநிலங்களிலும் இதை செயல்படுத்துவோம்.

மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய அளவிலும் இதேபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்படும்.

பிரதமா் நரேந்திர மோடி தன்னை எப்போதும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா் என்று அழைத்துக் கொள்கிறாா். ஆனால், தேசிய அளவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா்கள் கோரிக்கை விடுத்த பிறகு, அது குறித்து மட்டும் பேச மறுக்கிறாா்.

இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் எத்தனை போ் நாட்டில் உள்ளாா்கள் என்பதை அவா்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்று பிரதமா் மோடி கருதுகிறாா்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரியான முறையில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படாதது போன்ற காரணத்தால் சிறு, நடுத்தர தொழில்களும் வா்த்தகா்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், நாட்டில் வேலையின்மையும் அதிகரித்துவிட்டது. பெரும் தொழிலதிபா்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில்கள்தான் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பளித்து வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments