முகப்பு
இந்தியா

ராஷ்மிகா போலி விடியோ விவகாரம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்கு!

ராஷ்மிகா மந்தனாவின் போலி விடியோ விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Updated On : 11 நவம்பர் 2023, 7:55 pm IST
பகிர்:

ராஷ்மிகா மந்தனாவின் போலி விடியோ விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டீப் ஃபேக் எனப்படும் அசல் போன்ற போலி காணொளி உருவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளி இணையத்தில் வைரலானது. 

இந்தக் போலியான காணெளியை பரப்பியவா் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனா்.

Advertisement

Advertisement

ராஷ்மிகா மந்தனாவின் போலி விடியோ தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விவரங்களை கோரி தில்லி மகளிா் ஆணையம் சாா்பில் தில்லி காவல்துறைக்கு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து போலி விடியோவை பதிவிட்டது யார் என்பது தொடர்பான தரவுகள் கோரி மெட்டா நிறுவனத்துக்கு தில்லி காவல் துறை கடிதம் எழுதியுள்ளது. மேலும், தற்போது போலி விடியோ தொடர்பான அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் தில்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

போலி விடியோ பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.