இந்தியா

பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறையின் நடவடிக்கை என்ன? அதிஷி கேள்வி

PTI

பணமோசடி வழக்குகள் தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை வெளியிடுமாறு அமலாக்கத்துறைக்கு தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி என்னுடைய செய்தியாளா் சந்திப்பை அடிப்படையாகக் கொண்டு, பாஜக அளித்த புகாரின் அடிப்படையில், தோ்தல் ஆணையம் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, தேர்தல் ஆணையம் பாஜக உத்தரவின் பேரில் செயல்படுகிறது.

வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

பணமோசடி வழக்குகளில் பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

​​எதிர்க்கட்சிகளைக் குறிவைக்க மற்ற மத்திய அமைப்புகளைப் போலவே பாஜகவும் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துகிறது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களைக் குறிவைத்து அவர்களைக் கைது செய்ய சிபிஐ, இடி, தற்போது தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது.

மத்திய அமைப்புகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை விட்டுவிட்டு தேர்தலில் ஆம் ஆத்மியை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பாஜகவிடம் நான் சொல்ல விரும்புகிறேன், என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

தந்தையுடன் வாக்களித்த நடிகை குஷி கபூர்!

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

SCROLL FOR NEXT