இந்தியா

வீட்டுக்கு வந்த பார்சல்: குப்பை பை போல வந்த திருடன்.. வைரலான விடியோ

வீட்டுக்கு வந்த பார்சலைத் திருட குப்பை பை போல வந்த திருடன் பற்றிய விடியோ வைரலாகியிருக்கிறது.

DIN

பல்வேறு திருட்டு விடியோக்களை நாம் பார்த்து அதிர்ச்சியடைந்திருப்போம், சில ஆச்சரியத்தை அளித்திருக்கும். இது சற்று நகைச்சுவையை வரவழைக்கும் எனலாம்.

கலிஃபோர்னியாவில், ஒரு வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விடியோதான் தற்போது சமூக ஊடகங்களில் பலரின் கருத்துகளை பெற்று வருகிறது.

இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் சிசிடிவி விடியோவுடன் செய்தியும் பகிர்ந்துள்ளது. ஒரு வீட்டு வாயிலில், கருப்பு நிற குப்பை பை ஒன்று கனமாகக் கிடக்கிறது. என்ன அதிசயம், அதற்கு இரண்டு கால்களும் இருக்கின்றன.

பிறகு, அந்த குப்பை பை மெல்ல நடந்து வந்து, நீங்கள் நினைப்பது போல குப்பைத்தொட்டியில் எல்லாம் விழவில்லை. வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பார்சலை லாவகமாக எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு, அதே இரண்டு கால்களுடன் நடந்து சென்றுவிடுகிறது.

முனோஸ் என்பவரது வீட்டு வாயிலில் இருந்த சிசிடிவியில்தான் இந்த விடியோ பதிவாகியிருக்கிறது. இது குறித்து அவர் கூறுகையில், நான் ஆர்டர் போட்டிருந்தது வீட்டுக்கு வந்துவிட்டதாக எனக்கு மெசேஜ் வந்தது. ஆனால், மாலையில் வீட்டுக்குப் போகும்போது அந்த பார்சல் வீட்டில் இல்லை. உடனே சிசிடிவி விடியோவை ஆராய்ந்தபோது முதலில் எனக்குக் கோபம்தான் வந்தது. ஆனால், பிறகு பல முறை பார்த்து நகைச்சுவையாக இருந்தது என்கிறார்கள்.

இது பற்றி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறிவிட்டார். இந்த விடியோவுக்கு பலரும் பல விதமான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

எனினும், அந்த பார்சலில் என்னதான் இருந்தது என்று கேட்டால், அது வேறுஒன்றும் இல்லையாம் சுமார் 10 டாலர் மதிப்பிலான போன் சார்ஜர்தானாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT