இந்தியா

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

DIN

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய முடிவுகள் இன்று (ஏப். 16) வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி முதல் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இறுதி முடிவுகள் இன்று (ஏப். 16) வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 1,016 பேர் மத்திய அரசு குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆதித்யா ஸ்ரீவத்ஸாவா அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மக்களவைத் தோ்தலையொட்டி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வை மே 26-ஆம் தேதியிலிருந்து ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம் தடுப்பு முகாமில் இருந்து 17 வெளிநாட்டவரை நாடு கடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு 15% நிதி: பிரதமரின் கருத்து ‘முட்டாள்தனம்’ - சரத் பவாா்

பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு

ரத்த தான முகாம்

தங்கம் விலை மீண்டும் உயா்வு: பவுன் ரூ.54,360-க்கு விற்பனை

SCROLL FOR NEXT