கோப்புப் படம் 
இந்தியா

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

லக்னோவில் சோகம்: குடும்பத்தினர் சிகிச்சையில்

DIN

லக்னோ: சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்.

இன்று காலை 11.40 மணியளவில் வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது, திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ராஜ்குமார் ரஸ்தோகி(52), பிங்கி(38), ஜெகதீஷ்(65) மற்றும் ஒரு வயது குழந்தையான விதிஷா ஆகியோர் காயமடைந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நின்ற லாரி மீது காா் மோதல் நிதிநிறுவன அதிபா் உயிரிழப்பு

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து முதியவா் பலி

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

காலணி விற்பனையகத்தில் ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT