உத்தவ் தாக்கரே ENS
இந்தியா

முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஆதரவு: உத்தவ் தாக்கரே

மகா விகாஸ் அகாடி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் ஆதரவு தெரிவிப்பேன் என சிவசேனை(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

DIN

மகா விகாஸ் அகாடி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் ஆதரவு தெரிவிப்பேன் என சிவசேனை(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை(யுபிடி) ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

இந்நிலையில் மகா விகாஸ் அகாடி கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிவசேனை(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே,

இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மகாராஷ்டிரத்தின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம்.

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் ஆதரவு தெரிவிப்பேன். மகாராஷ்டிரத்தின் உரிமைக்காக போராடுவேன்.

தேர்தலுக்கு முன்னதாகவே முதல்வர் வேட்பாளர் யார் என முடிவு செய்ய வேண்டும். கூட்டணியில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள கட்சியில் இருந்து முதல்வர் அறிவிக்கப்படுவதைவிட முன்கூட்டியே முடிவு செய்வது நல்லது.

ஏனெனில், கடந்த பல தேர்தலில் பாஜவுடனான கூட்டணியில் எங்களுக்கு அனுபவம் கிடைத்துள்ளது. முதல்வர் பதவியைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி எம்எல்ஏக்களை அணுகுகின்றனர். எனவே இந்த முறை தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்து அறிவிக்கும். அவருக்கு நான் ஆதரவு அளிப்பேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT