கொல்கத்தாவில் போராட்டம் Swapan Mahapatra | PTI
இந்தியா

மாணவர்கள் மீது தடியடி: பாஜக நாளை போராட்டம்!

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்து பாஜக போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

DIN

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்து பாஜக போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடு முழுவதுமே இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கொல்கத்தா மாணவர்கள் சங்கம் அறிவித்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் மாபெரும் பேரணியை முன்னெடுத்துள்ள மாணவர்கள் சங்கம் இன்று நபன்னா பகுதியை அடைந்தது. ஹௌரா பாலத்தில் காவல்துறையினர் தடுப்புகளை வைத்திருந்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் அந்த தடுப்புகளை கடந்து செல்ல முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அங்கு போராட்டம் வன்முறையாக மாறியது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மேற்குவங்க காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் மீது தடியடி நடத்திய மேற்குவங்க காவல்துறையைக் கண்டித்து நாளை 12 மணி நேர போராட்டத்தை அறிவித்துள்ளது.

பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மம்தா பானர்ஜி, குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டுகிறது.

மேலும் முதல்வர் பதவியில் இருந்து மம்தா ராஜிநாமா செய்ய வலியுறுத்தி பாஜக இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தற்போது வழக்கினை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT