தில்லியில் ஒரேநாளில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில் உள்ள 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து திங்கள்கிழமை மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அச்சுறுத்தலைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
பின்னர் வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள், தீயணைப்பு அதிகாரிகள், உள்ளூர் போலீஸார் மற்றும் மோப்ப நாய் படைகள் குறிப்பிட்ட பள்ளிகளில் சோதனை மேற்கொண்டனர்.
இருப்பினும் சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் காலை 9.30 மணியளவில் தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லி முதல்வர் அதிஷி, தில்லி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னதாக மே மாதத்தில், தலைநகரில் உள்ள 200க்கும் மேற்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களுக்கு இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.