மருத்துவர்கள் போராட்டம் (கோப்புப் படம்) 
இந்தியா

குற்றவாளிகளுக்கு ஜாமீன்: 10 நாள்கள் தொடர் போராட்டத்திற்கு மருத்துவர்கள் திட்டம்!

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த மருத்துவர்கள் திட்டம்.

DIN

கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த மேற்கு வங்க மருத்துவர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கல்லூரி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இரு முக்கிய குற்றவாளிகளான கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோருக்கு இரு நாள்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், சட்டப்படி 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டிய நிலையில் சிபிஐ தாமதித்ததால் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.

இது அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சீற்றத்தை எற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 5 மருத்துவ சங்கங்களை உள்ளடக்கிய மேற்கு வங்க மருத்துவர்கள் கூட்டமைப்பு வருகிற டிசம்பர் 26 வரை 10 நாள்களுக்கு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

”நாங்கள் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைதியான முறையில் போராட்டம் நடத்த முடிவெடுத்து அனுமதி கோரியிருக்கிறோம். சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே எங்களது போராட்டம் நடைபெறும். 10 நாள்கள் போராட்டம் நடத்துவதற்கு கொல்கத்தா ஆணையரிடம் அனுமதி கேட்டுள்ளோம். சிபிஐ இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்” என மருத்துவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT