FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த முக்கியக் குற்றவாளி!

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு குறித்து...

21 டிசம்பர் 2024, 6:56 pm IST
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் - ANI
பகிர்:

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி தன்னை நிரபராதி என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9 அன்று பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். விசாரணையில் அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் (33) இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கொலை நடந்த அடுத்த நாளே கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருக்கும் அவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் மரண தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவ. 11 அன்று நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது. சுமார் 50 பேரிடம் சாட்சியங்களைப் பெற்ற நீதிமன்றம் நேற்று (டிச. 20) சஞ்சய் ராயிடம் விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் தான் குற்றவாளி இல்லை என்று சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். ”நான் குற்றவாளி அல்ல. நான் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளேன்” என சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் கூறியதாக அவரது வக்கீல் சௌரவ் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ளார்.

மேலும், “நீதிபதி அனிர்பன் தாஸ் சஞ்சயிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டார். 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணை கேமராவில் பதிவு செய்யப்பட்டது” என அவரது வக்கீல் கூறினார்.

முன்னதாக, கடந்த மாதம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேனில் இருந்த சஞ்சய் ராய் தான் நிரபராதி என பொதுமக்களின் முன்னிலையில் கத்தினார். தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் அவர் இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 2, 2025 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments