சம்பயி சோரன் (கோப்புப்படம்) 
இந்தியா

ஆளுநரை சந்திக்கிறார் சம்பயி சோரன்!

சம்பயி சோரன் ஜாா்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திக்கிறார்.

DIN

சம்பயி சோரன் ஜாா்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திக்கிறார்.

பெரும்பாண்மையை நிரூபிக்க ஆளுநரை சந்திக்க அனுமதிக் கேட்டு சம்பயி சோரன் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். அவர் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், மாநிலத்தின் நிலையான ஆட்சியை வழங்கும் திறன் உள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சம்பாய் சோரன் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை  கோரவுள்ளார். 

சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை புதன்கிழமை சுமாா் 7 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, ஜாா்க்கண்ட் முதல்வா் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா் அமலாக்கத் துறையினா் அவரை உடனடியாக கைது செய்தனா்.

புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நம்பிக்கைக்குரியவரும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான சம்பயி சோரன் தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT