இந்தியா

கர்நாடகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு!

கர்நாடகத்தில் 3 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

DIN

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியமர்த்தப்பட்டிருந்த 3 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொழிலாளர் அமைப்பு அதிகாரிகள், குழந்தைகள் பாதுகப்பு அமைப்பு மற்றும் காவல்துறையினர் இணைந்து அந்தக் குழந்தைகளை மீட்டுள்ளனர்.

நகைக்கடையில் குழந்தைகள் பணியமர்த்தப்படுவதாக எழுந்த புகாரினடிப்படையில் கடந்த வியாழக்கிழமை அதிகாரிகள் அங்கு சென்றனர். தங்கத்தை மெருகூட்டும் வேலைகளில் அந்தக் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். 

குழந்தைகள் நலக்குழுவின் ஆணையின்படி மீட்கப்பட்டவர்கள், குழந்தைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT