இந்தியா

கடனைத் திருப்பிக் கேட்ட ஆசிரியரை அடித்து உதைத்த குடும்பம்!

DIN

மஹாராஷ்டிரம் தானேவில் கல்லூரி ஆசிரியராக பணியாற்றும் நபர், கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதற்காக தாக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது, பாதிக்கப்பட்ட ஆசிரியர், கொடுத்த ரூ. 2000 கடனைத் திருப்பிக் கேட்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபரின் பழக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு கடனைத் திருப்பிக் கேட்டுள்ளார். 

இதையும் படிக்க: ஒடிசா: ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

பின்னர் அந்த பழக்கடைக்காரர், அவரது பெற்றோர், மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். கடனைத் திருப்பிக் கேட்பதற்காக அவரை 4 பேரும் தாக்கியுள்ளனர்.

அங்கிருந்த பொதுமக்கள் ஆசிரியரைக் காப்பாற்றிய நிலையில், அவரைத் தாக்கியவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் காவல்துறையினர் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல்லடம் அருகே இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

கிரீன் பாரடைஸ் பள்ளி 100% தோ்ச்சி

கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை: ஒருவா் கைது

சிவகிரி அருகே இளம்பெண் தற்கொலை

தில்லியில் உத்தரவாதம் வழங்களில் போட்டிபோடும் கட்சிகள்!

SCROLL FOR NEXT