இந்தியா

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: மொத்தம் 1389.49 ஹெக்டேரை கையகப்படுத்தும் பணிகள் நிறைவு

DIN

அகமதாபாத்: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்குத் தேவையான 1389.49 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே அதிவேகமாக இயங்கும் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரம், குஜராத், தாத்ரா மற்றும் நகா் ஹவேலி வழியாக இந்த வழித்தடம் அமைக்கப்படுகிறது.

ஜப்பான் தொழில்நுட்பத்தில், அந்நாட்டு அரசு முகமையின் ரூ.88,000 கோடி கடனுதவியுடன், மொத்தம் ரூ.1.10 லட்சம் கோடி செலவில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தேசிய அதிவேக ரயில் கழக நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான அனைத்து பொதுப் பணி ஒப்பந்தங்களும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்துக்கு வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘புல்லட் ரயில் திட்டத்துக்குத் தேவையான 1389.49 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT