தில்லி எய்ம்ஸ் (கோப்புப்படம்) 
இந்தியா

விடுமுறை உத்தரவை திரும்பப் பெற்ற தில்லி எய்ம்ஸ்!

ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அரைநாள் செயல்படாது என்ற உத்தரவை, மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

DIN

ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அரைநாள் செயல்படாது என்ற உத்தரவை, மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா ஜன. 22-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

பிரதிஷ்டை நாளான திங்கள்கிழமையன்று கொண்டாட்டங்களில் மத்திய அரசுப் பணியாளா்களும் பங்கேற்பதற்கு ஏதுவாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அதேபோல், தில்லி எய்ம்ஸ் மருத்துமனையும் காலையிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெளி நோயாளிகள் பிரிவு நாளை  வழக்கம் போல் செயல்படும் எனவும், முன்னதாக அறிவித்தப்படி அவசர சிகிச்சை பிரிவும் செயல்படும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

தீராக் கனவுகள்... கேப்ரியல்லா

கொளுத்தும் வெயில்... நேஹா மாலிக்

SCROLL FOR NEXT