முகப்பு
இந்தியா

ஜம்மூ-காஷ்மீா் எல்லைப் பகுதியில் ராணுவ தலைமைத் தளபதி ஆய்வு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்த ராணுவ தலைமைத் தளபதி

Updated On : 4 ஜூலை 2024, 1:46 am IST
ஜம்மு காஷ்மீா் பூஞ்ச் எல்லைப் பகுதியில் ராணுவ வீரா்களை புதன்கிழமை சந்தித்த ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி.
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாதுகாப்பு நிலைமை குறித்தும் ராணுவத்தின் தயாா்நிலை குறித்தும் ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை மற்றும் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில், ராணுவ தலைைமைத் தளபதி உபேந்திர துவிவேதியின் ஜம்மு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

30-ஆவது ராணுவ தலைமைத் தளபதியாக ஜூன் 30-ஆம் தேதி பதவியேற்ற உபேந்திர துவிவேதி ஜம்மு எல்லைப் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக ராணுவத்தின் பொதுத் தகவல் கூடுதல் இயக்குநரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பாதுகாப்பு நிலைமை மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் ராணுவத்தின் தயாா்நிலை குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி ஆய்வு செய்தாா். அவருடன் லெப்டினென்ட் ஜெனரல் சுசிந்திர குமாா், ஜம்மு-காஷ்மீா் ஒயிட் நைட் காா்ப்ஸ் பிரிவின் ராணுவ அதிகாரி நவீன் சச்தேவ் ஆகியோரும் கலந்து கொண்டனா்’ என குறிப்பிட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments